fbpx

லிபியா வெள்ளம்..!! பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு..? ஐநா அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஐநா இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

லிபியா மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டி அமைந்திருக்கிறது. இந்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற வாடி டெர்ணா எனும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம்தான் இந்த விபத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆறு உருவாகும் மலை பகுதிக்கும், மத்திய தரைக்கடல் பகுதிக்கும் இடையில் டெர்ணா நகரம் உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய தரைக்கடல் பகுதியில் டேனியல் எனும் புயல் உருவானது. இது மெல்ல நகர்ந்து லிபியாவின் டெர்ணா நகரை குறிவைத்தது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக லிபியாவில் உறுதியான ஆட்சி இல்லாததால் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாமலும், ஏற்கனவே இருக்கும் கட்டமைப்புகள் முறையாக பராமரிக்கப்படாமலும் இருக்கின்றன.

இந்நிலையில் கனமழை காரணமாக வாடி டெர்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இது ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணையை உடைத்தெறிந்தது. இப்படியாக இரண்டு அணைகள் உடைந்ததால், டெர்ணா நகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. மனிதர்கள், வாகனங்கள், வீடுகள் என அனைத்தையும் வெள்ளம், நேரடியாக கடலுக்கு இழுத்துச் சென்றது. இதையடுத்து, அக்கம் பக்கம் நாடுகள் மீட்பு படைகளை லிபியாவுக்கு அனுப்பி வைத்தன. முதல்கட்ட மீட்பு பணியில் சில நூறு பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் நேரம் போக போக உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டது.

தற்போது வரை சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று ரெட் கிராஸ் அமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர். பலரின் உடல்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், ஐநா இந்த உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த வெள்ளத்தில் 3,958 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஐ.நா.வுக்கான மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அதிகாரி கூறியுள்ளார். அதேபோல மற்றொருபுறம் மீட்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Chella

Next Post

ஆட்டம் கண்ட மகாராஷ்டிரா மாநிலம்....! பேய் ஓட்டுவதாக தெரிவித்து, பலாத்காரம் செய்த கணவரின் நண்பர்கள் இறுதியில் நடந்தது என்ன....?

Mon Sep 18 , 2023
மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வரும் ஒரு பெண்ணிடம் அவருடைய வீட்டில் தீய சக்திகள் உள்ளதாக தெரிவித்து, அதை போக்கிவிட்டால், நீங்கள் செழிப்பாக வாழலாம் என்று பலர் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய அந்த பெண், தன்னுடைய வீட்டில் இருக்கும் தீய சக்தியை ஓட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். இதனால், அவருடைய கணவரின் நண்பர்களின் உதவியை நாடினார். அதேபோல கணவரின் நண்பர்களில் ஒருவருக்கு மாந்திரீகம் தெரியும் என்று கூறப்படுகிறது. ஆகவே, அந்தப் பெண்ணின் கணவரின் […]

You May Like