fbpx

வெளிநாட்டு உயிரினங்களை வளர்க்க உரிமைச்சான்று கட்டாயம்..!! வனத்துறை அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் அயல்நாட்டு உயிரினங்களை வளர்ப்போர் அது தொடர்பான விவரங்களை புதிய இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் என வனத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”சுற்றுச்சூழல், வனஅமைச்சகம், வன உயிரின (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ், உயிருள்ள விலங்கு இனங்கள் (அறிக்கையிடல் மற்றும் பதிவு செய்தல்) விதிகள், 2024-ன் படி பரிவேஷ் 2.0 (PARIVESH 2.0) இணைய பக்கம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே பரிவேஷ் 1.0 இணைய பக்கத்தில் உயிருள்ள விலங்கு இனங்கள் தன்னார்வ பதிவு, பிறப்பு, இறப்பு மற்றும் வேறு நபர்களுக்கு மாற்றம் செய்தல் தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது. தற்போது அயல்நாட்டு உயிரினங்களை வைத்திருக்கும் மற்றும் இனிவரும் காலங்களில் இத்தகைய உயிரினங்களை பெறும் அனைவரும் பரிவேஷ் 2.0 இணையதளத்தில் பதிவு செய்து உரிமைச்சான்று பெறுவது கட்டாயமாகும்.

அயல்நாட்டு உயிரினங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் இந்த விதிகள் நடைமுறைக்கு வந்த நாளில் இருந்து, 6 மாதத்துக்குள்ளும், அதன் பிறகு அத்தகைய உயிரினங்களை பெறும் நாளில் இருந்து 30 நாளுக்குள்ளும் பரிவேஷ் 2.0 இணையதளத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணம் ரூ.1000. அயல்நாட்டு உயிரினங்களின் இறப்பை, கால்நடை மருத்துவர் வழங்கிய உடல் கூராய்வு அறிக்கையுடன் தாக்கல் செய்ய வேண்டும். அயல்நாட்டு உயிரினங்களை மற்றொருவருக்கு மாற்றும் பட்சத்தில் 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த இனங்களை எந்தவொரு உள்நாட்டு இனங்களுடன் இனக் கலப்பு செய்ய அனுமதி இல்லை.

Read More : நொந்துபோன செந்தில் பாலாஜி..!! 36-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!!

Chella

Next Post

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவு..!! நிறுவனமே ஒப்புக்கொண்டதால் அதிர்ச்சி..!!

Tue Apr 30 , 2024
கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா பின்னர் உலக முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. பின்னர் கொரோனா வைரஸை ஒழிக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும் உலக நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை கண்டுபிடித்தன. அதில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின. இந்த தடுப்பூசி […]

You May Like