fbpx

உயிருக்கு ஆபத்து!… நவ.19 கெடு விதித்த பயங்கரவாதி!… உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி நடக்குமா?

நவம்பர் 19 ஆம் தேதி ஏர் இந்தியா வழியாக பயணிப்பவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிட வாய்ப்பு உள்ளது காலிஸ்தான் பயங்கரவாதி எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசிய வீடியோ வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா விமானத்திற்கு மிரட்டல் விடுக்கும் வகையில், காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் பேசிய புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அவர் நவம்பர் 19 ஆம் தேதி ஏர் இந்தியா வழியாக பயணிக்கும் சீக்கியர்கள் “உயிருக்கு ஆபத்து நேரிட வாய்ப்பு உள்ளது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், நவம்பர் 19 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம் என்று சீக்கிய மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். உலகளாவிய முற்றுகை இருக்கும். இதனால், நவம்பர் 19 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வேண்டாம் அல்லது உங்கள் உயிருக்கு ஆபத்து என்று கூறியுள்ளார். மேலும், டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நவம்பர் 19 அன்று மூடப்பட்டிருக்கும் என்றும் அதன் பெயர் மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறும் அதே நாளில் தான் இது அனைத்தும் நடக்கும் என காலிஸ்தான் பயங்கரவாதி பரபரப்பாக பேசிய வீடியோ இணையத்தில் வெளிவந்து தற்போது வைரலாக பரவி வருகிறது. முன்னதாக, அக்டோபர் 10 அன்று இந்த பயங்கரவாதி பேசிய வீடியோ ஒன்றில், இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரில் இருந்து பிரதமர் மோடி கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவிலும் இதேபோன்ற நிலைமை வராமல், தடுக்க இந்திய அரசு கைகளில் உள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் அந்த வீடியோவில், பஞ்சாப் முதல் பாலஸ்தீனம் வரை சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் எதிர்வினையாற்றுவார்கள் என்று கூறியிருந்தார். இந்தச் சூழலில் ஏர் இந்தியா விமானத்திற்கு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kokila

Next Post

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி டிராபியை வென்றது இந்திய அணி!… ஜப்பானை வீழ்த்தி வீராங்கனைகள் அசத்தல்!

Mon Nov 6 , 2023
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான ஜப்பானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. மகளிருக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் மைதானத்தில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஜப்பான், 3 முறை சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியனான இந்தியா மற்றும் […]

You May Like