ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி தோற்றதை கிண்டல் செய்ததால் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருங்குடியில், மதுபோதையில் இருந்தபோது சென்னை அணிக்கு ஆதரவாக பேசியவர்களை கிண்டல் செய்த ஜீவரத்தினம் என்பவரை சக நண்பர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஜீவரத்தினம் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கும் நிலையில், அப்பு என்பவரின் மனைவியிடம் ஜீவரத்தினம் பழகியத்தை தட்டி கேட்டதால் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஜீவரத்தினத்திடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
CSK vs RCB
ஐபிஎல் தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 196 ரன்களை குவித்தது. ஆனால், அதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துரத்த முடியாமல் திணறியது. இறுதியில் சிஎஸ்கே அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 146 ரன்களே எடுத்து தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
Read More : உண்மையை மறைத்த இபிஎஸ்..!! டெல்லி ரகசியத்தை போட்டுடைத்த அமித்ஷா..!! பாஜக – அதிமுக கூட்டணி உறுதி..?