fbpx

குளிர்ச்சியான செய்தி…! வரும் 25-ம் தேதி வரை தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை…! வானிலை மையம் அப்டேட்…!

தமிழகத்தில் 25-ம் தேதி வரை, ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் 25-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி முதல் 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

Woww..! தமிழக அரசு வழங்கும் வாரம் ரூ.4,000 உதவித்தொகை...! எப்படி விண்ணப்பிப்பது...? முழு விவரம் இதோ....

Wed Mar 22 , 2023
தமிழ்நாடு அரசு தமிழ்‌ வளர்ச்சித்‌ துறையின்‌ சார்பில்‌ அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும்‌ திட்டம்‌ ஆண்டு தோறும்‌ செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ்‌ 2023-ம்‌ ஆண்டிற்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க தகுதிகளாக 01.01.2022 ஆம்‌ நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்‌. ஆண்டு வருவாய்‌ ரூ.72,000-க்குள்‌ இருக்க வேண்டும்‌. வட்டாட்சியர்‌ அலுவலகத்தில்‌ இணையவழியில்‌ பெறப்பட்ட வருமானச்‌ சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள்‌ மற்றும்‌ தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச்‌ […]

You May Like