2023-2024ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அதில், நடுத்தர மக்களுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கம், வெள்ளி மற்றும் வைரம் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டது. இதனால் மீண்டும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடலாம் என கூறப்பட்டது. அதன்படி, மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி உயர்வு அறிவிப்பு எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்வை கண்டிருக்கிறது.
அந்தவகையில், இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.5,475-க்கும், ஒரு சவரன் ரூ.43,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.30 உயர்ந்து ரூ.77.30-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று மாலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் ரூ.5,505-க்கும், ஒரு சவரன் ரூ.44,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி ஒரு கிராம் ரூ.77.80-க்கும் ஒரு கிலோ ரூ.77,800-க்கும் விற்பனையாகிறது.