2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஜீவாவிற்கு ஜோடியாக அவர் இந்த படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், வணிக ரீதியான வெற்றி படமாகவே இது அமைந்தது.
இதை தொடர்ந்து பூஜா ஹெக்டேவிற்கு தெலுங்கு, ஹிந்தியில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. தெலுங்கில் பல வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக மாறினார். தெலுங்கில் பல உச்ச நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார் பூஜா ஹெக்டே. அவ்வபோது ஹிந்தி படங்களிலும் நடித்து வந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுத்தா பூஜா. தற்போது சூர்யாவின் ரெட்ரோ படத்தில் அவர் நடித்து வருகிறார். மேலும் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசி படமாக உருவாகி வரும் ஜனநாயகன் படத்திலும் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
பூஜா ஹெக்டே கடைசியாக தேவா என்ற பாலிவுட் படத்தில் நடித்திருந்தார். கடந்த மாதம் வெளியான இந்த படத்தின் ஷாகித் கபூர் ஹீரோவாக நடித்திருந்தார். ரோஷன் ஆண்ட்ரூஸ் இந்த படத்தை இயக்கி இருந்தார். எனினும் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. எனினும் இந்த படத்தில் ஷாகித் கபூர் – பூஜா ஹெக்டேவின் லிப் லாக் காட்சி இணையத்தில் படு வைரலானது.
இந்த நிலையில் ஜனநாயகன் படத்தில் லிப்லாக் காட்சியில் நடிக்க பூஜா ஹெக்டே மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் லிப்-லாக் காட்சியை படக்குழுவினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்தக் காட்சியில் நடிக்க பூஜா மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கதைக்குத் தேவை என்றால் இதுபோன்ற காட்சிகளில் நடிக்கலாம் என்றும் கவர்ச்சியைச் சேர்ப்பதற்காக லிப் லாக் காட்சியை வைப்பது பொருத்தமாக இருக்காது என்றும் பூஜா ஹெக்டே தெரிவித்துவிட்டாராம்.
எனினும் ஜனநாயகன் படம் வெளியான பிறகுதான் இந்த விஷயத்தில் உண்மை என்ன என்பது தெரியவரும். பூஜா ஹெக்டேவை சம்மதம் பெற்று படக்குழுவினர் லிப்-லாக் காட்சியைத் தக்கவைத்துக்கொள்வார்களா அல்லது மாற்று அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பார்களா என்பது குறித்த ஊகங்கள் தொடர்ந்து வருகின்றன.
Read More : குட் நியூஸ்!!! மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் ரஜினியின் சூப்பர் ஹிட் திரைப்படம்..