fbpx

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை..!! அதிரடி காட்டும் அமைச்சர் முத்துசாமி..!! இனி பணிநீக்கம் தான்..!!

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக்கில் எம்ஆர்பியை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கையோடு அதிரடியாக வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, தற்போது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். இதையடுத்து அவரிடம் இருந்த துறைகள் மற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி மின்சாரத்துறை நிதியமைச்சர் தங்கம் தென்னரசிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. அதேபோல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி வசம் கூடுதலாக வழங்கப்பட்டது.

தற்போது செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார். இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக, பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாக டாஸ்மாக்கில் வசூலிக்கப்படுவதாக வீடியோக்கள் வெளியாகின. இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில் தான் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் அமைச்சர் முத்துசாமி 2 நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் ஊதிய உயர்வு, பதவி உயர்வு பற்றியும் அவர்கள் அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை வைத்தனர். அதனை கேட்ட அமைச்சர் முத்துசாமி அதுபற்றி முதல்வர் ஸ்டாலினிடம் கலந்து பேசி நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

மேலும், அமைச்சர் முத்துசாமி தொழிற்சங்க நிர்வாகிகளிடம் எச்சரிக்கை விடுத்தார். அதாவது டாஸ்மாக் கடையில் நிர்ணயிக்கப்பட்ட எம்ஆர்பி விலையில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக விற்க கூடாது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான புகார் தொடரும் பட்சத்தில் பணியாளர் மீது காவல்துறையில் புகார் அளித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு விற்பனையாளர் பணிநீக்கம் செய்யப்படுவார். மேலும் அரசுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட கூடாது. டாஸ்மாக்கில் வீடியோ எடுத்து பதிவிடுவதை அனுமதிக்கக் கூடாது. இதுபற்றி விற்பனையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

Chella

Next Post

”யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்”..!! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

Mon Jun 26 , 2023
ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018இல் அறிவிப்பு வெளியிட்டார். இதனை எதிர்த்து அதே கோயிலில் பணிபுரிந்து வந்த சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், சுகனேஸ்வர் கோயிலில் ஆகமத்தின் அடிப்படை ஆனது. இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள […]

You May Like