fbpx

உலகில் அதிக விவாகரத்து நடக்கும் நாடுகள் பட்டியல்!… முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா?

உலகிலேயே அதிகம் விவாகரத்து ஏற்படும் நாடுகள் பட்டியலில் மாலதீவு முதலிடத்தில் உள்ளது. இங்கு திருமணம் செய்யும் 1000 பேர்களில் 5.5% தம்பதிகள் விவாகரத்து பெறுகிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் பிரச்சனைகள் பேசி தீர்க்கப்படும். ஆனால், தீர்க்கமுடியாத பிரச்னையாக உருவெடுத்து நீதிமன்றம் வரை சென்று திருமணமான தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிவார்கள். அந்தவகையில் உலகில் அதிகம் விவாகரத்து நடக்கும் நாடுகளின் பட்டியல் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.குட்டி குவாம் அமெரிக்க நாட்டில் திருமணம் ஆகும் தம்பதிகளில் சுமார் 4.3% பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.இது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யா அதிகம் விவாகரத்து நடக்கும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நாட்டில் திருமணம் ஆகும் 1000 பேர்களில் 3.9% பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.ஐரோப்பாவின் போல்கன் நாடுகளில் ஒரு நாடாக இருக்கும் மோல்டோவாவில் அதிகம் விவாகரத்து நடக்கும் நாடுகளில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.இங்கு தம்பதிகள் 1000 பேர் திருமணம் செய்தால் 3.8% பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.ஐரோப்பாவில் இருக்கும் பெலாரஸ் நாட்டில் திருமணம் ஆன 1000 தம்பதிகளில் 3.7% பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.இது ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

ஆசியாவில் இருக்கும் மிகப்பெரிய நாடான சீனா விவாகரத்து பட்டியலில் ஆறாவது இடம் பிடித்துள்ளது. இங்கு திருமணம் ஆகும் 1000 தம்பதிகளில் 3.2% பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.அமெரிக்காவில் கியூபாவிற்கு அருகில் இருக்கும் குட்டி தீவு நாடான அருபா பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. இங்கு 1000 பேர்களில் 2.9% பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் ஜோர்ஜியா பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த நாட்டில் திருமணம் ஆகும் 1000 தம்பதிகளில் 2.9% பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.

தற்போது பெரும் போர் நடைபெறும் உக்ரைன் நாட்டில் திருமணம் ஆகும் 1000 தம்பதிகளில் 2.9% பேர் விவாகரத்து பெறுகிறார்கள். இந்த நாடு பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.சிறிய நாடான கோஸ்டா ரிக்காவில் திருமணம் ஆகும் தம்பதிகளில் 1000 பேரில் 2.8% பேர் விவாகரத்து பெற்று பிரிகிறார்கள். இந்த நாடு விவாகரத்து பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது.

Kokila

Next Post

அடர்த்தியான தலைமுடி வேண்டுமா?... நீங்கள் பருக வேண்டிய பானங்கள் இதோ!...

Thu Mar 9 , 2023
அடர்த்தியான, உறுதியான கூந்தலைப் பெறுவதற்கு அன்றாட உணவுப்பழக்கங்களை மாற்றுவதன் மூலம் சிறந்த தீர்வினை பெறலாம். இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் நாம் அன்றாடம் பருகும் பானங்கள் சில கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. அந்தவகையில், கேரட் சாறு பருகுவதன் மூலம் இளநரைகள் தடுக்கப்பட்டு, அடர்த்தியான, உறுதியான மற்றும் நீண்ட கூந்தலை பெறலாம். கேரட் சாற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் விற்றமின்கள் நிறைவாக உள்ளது இது கூந்தலுக்கு நிறைவான ஆரோக்கியத்தை வழங்குகின்றது. வெள்ளரி சாறு […]

You May Like