fbpx

உலகின் செலவுமிக்க நகரங்கள் பட்டியல்!… முதலிடத்தில் நியூயார்க்!… இந்தியாவில் எந்த நகரமும் இடம்பெறவில்லை!

உலகின் செலவுமிக்க நகரங்கள் பட்டியலில் நியூயார்க் முதலிடத்தில் உள்ளது. முதல் 20 இடங்களில் இந்தியாவின் எந்த நகரமும் இடம் பெறவில்லை.

2023-ஆம் ஆண்டுக்கான உலகின் செலவுமிக்க (Most Expensive Cities) நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், 20 நகரங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டினருக்கான உலகின் மிகவும் செலவுமிக்க நகரங்களின் பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பு, கட்டட வாடகை அதிகரித்து வருவதே நியூயார்க் செலவுமிக்க நகரமாக ஆக காரணம். உலகின் செலவுமிக்க நகரங்கள் பட்டியலில் இதுவரை முதலிடத்தில் இருந்த ஹாங்ஹாங் இந்தாண்டு இரண்டாவது இடத்துக்கு சென்றுள்ளது. இதுபோன்று, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா மூன்றாவது இடம், லண்டன் நான்காவது, சிங்கப்பூர் ஐந்தாவது என முதல் 5 இடங்களுக்குள் உள்ளன.

கடந்த ஆண்டு 13வது இடத்தில் இருந்த சிங்கப்பூர் முதல் முறையாக முதல் 5 இடங்களுக்குள் முன்னேறியது. இதன்பின் ஜூரிச், சான் பிரான்சிஸ்கோ, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், சியோல், டோக்கியோ ஆகியவை அதிக செலவுமிக்க நகரங்களில் முதல் 10 இடங்களில் உள்ளன. இதனைத்தொடர்ந்து, சுவிட்சர்லாந்து பெர்ன், துபாய் UAE, ஷாங்காய் சீனா, குவாங்சூ சீனா, லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்கா, ஷென்சென் சீனா, பெய்ஜிங் சீனா, கோபன்ஹேகன் டென்மார்க், அபுதாபி UAE, சிகாகோ அமெரிக்கா ஆகிய நகரங்கள் முதல் 20 இடங்களில் உள்ளன.

இந்த பட்டியலில் அமெரிக்கா மற்றும் சீனாவில் உள்ள நகரங்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. அதே நேரத்தில் துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபி ஆகியவை இந்த ஆண்டு தரவரிசைப்படுத்தப்பட்ட மொத்த 20 நகரங்களில் ஒன்று குறைந்துள்ளது. ஆசியாவில், சீன நகரங்கள் மற்றும் சிங்கப்பூர் தவிர, ஜப்பானின் டோக்கியோ மற்றும் தென் கொரியாவின் தலைநகரான சியோல் ஆகியவை முதல் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும், உலகின் செலவுமிக்க முதல் 20 நகரங்களில் இந்தியாவின் எந்த நகரமும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Kokila

Next Post

சூடான சாதத்துடன் தயிர் கலந்து சாப்பிடுபவர்களாக நீங்கள்!... இந்த தவறை இனி பண்ணிடாதீங்க!... ஆபத்து!

Thu Jun 8 , 2023
சூடான சாதத்தில் தயிர் கலந்து சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம் இந்தியாவில், அனைத்து சமையலறைகளிலும் பிரதானமாக உள்ள ஒரு உணவு, தயிர். இந்தளவுக்கு தயிரை மக்கள் விரும்பி உண்ண, அதன் தன்மைகளே முக்கிய காரணங்களாக உள்ளன. குறிப்பாக தயிரின் குளிர்ச்சி, இனிமையான சத்துகளே அவை பலராலும் விரும்பப்பட காரணமாக இருக்கிறது. இதுவொரு பக்கம் இருந்தாலும் விருப்ப உணவு என்பதைத்தாண்டி தினமும் தயிர் சாப்பிட்டால் அது […]

You May Like