பதவியேற்று சில வாரங்களே ஆன நிலையில் தனது பிரிட்டனின் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார் லிஸ்ட்ரஸ் ..
பிரிட்டன் பிரதமராக பதவி வகித்த லிஸ்ட்ரஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பொருளாதார திட்டம் வகுத்ததில் ஏற்பட்ட நிலைப்பாட்டை தொடர்ந்து அவருக்கு எதிராக கட்சியினர் பதவி விலக கோரிக்கை வைத்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டதால் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு நிதி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பெரும்பாலும் சாமானிய மக்களுக்கு எதிராகவே இருந்தது. இதற்கு பெருவாரியான கட்சியினர் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டது. டாலருக்கு எதிரான பவுண்டின் மதிப்பு குறைந்து வந்தது. பலகட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டார் லிஸ்ட்ரஸ் . பிரிட்டன் பொருளாதாரம் திவாலாகும் நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
எனவே லிஸ்ட்ரஸ் பதவி விலக வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் இன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார். 6 வாரங்கள் மட்டுமே பதவி வகித்தார் லிஸ்ட்ரஸ்