fbpx

தண்ணீர் தொட்டிக்குள் தத்தளித்த பிஞ்சு குழந்தைகள்..!! சற்றும் யோசிக்காமல் குதித்த தாய்..!! 3 பேர் பரிதாப மரணம்..!! நாமக்கல்லில் சோகம்..!!

தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி தாய் உள்பட 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் இந்துமதி. இவருக்கு நிதின் ஆதித்யா (11 மாதம்), யாத்விக் (3 வயது) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், நிலத்தடி நீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்த இந்துமதி, நிரம்பினால் தெரிந்து கொள்வதற்காக தொட்டியை மூடாமல் மற்ற வேலைகளை பார்த்து வந்துள்ளார்.

அப்போது, அந்த தொட்டியின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நிதின் ஆதித்யா, தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளான். இதனைப் பார்த்த அண்ணன் யாத்விக்கும் தம்பியின் கையை பிடித்து மேலே இழுக்க முயற்சித்துள்ளான். ஆனால், அவனும் உள்ளே தவறி விழுந்துள்ளான். இதையடுத்து, குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் இந்துமதி, தொட்டிக்குள் தனது இரண்டு குழந்தைகளும் உயிருக்கு போராடுவது பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், யோசிக்காமல் அவருடம குழந்தைகளை காப்பாற்றுவதற்காக தொட்டிக்குள் குதித்துள்ளார். ஆனால், தண்ணீர் தொட்டியில் நீர் நிரம்பியதால் 3 பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தாய் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

Read More : தலைமை, திறமை, துணிவு உள்ளிட்ட 6 பிரிவுகளில் பெண் ஆளுமைக்கான “சக்தி விருதுகள் 2025”..!!

English Summary

The death of two children, including a mother, after drowning in a water tank has caused great sadness.

Chella

Next Post

11 வயது பேத்தி மீது தாத்தாவிற்கு ஏற்பட்ட ஆசை; பாலியல் தொல்லை தாங்க முடியாமல் சிறுமி செய்த காரியம்..

Mon Feb 3 , 2025
11 years old girl was sexually abused by her grand father

You May Like