மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,012 ஆகி உயர்ந்துள்ளது. மேலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது
கடந்த வெள்ளிகிழமை இரவு 11.11 மணிக்கு (இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 3.30 மணி) வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோ. நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடமான மராகேஷுக்கு தென்மேற்கே 72 கிலோமீட்டர் (45 மைல்) தொலைவில் உள்ள மலைப் பகுதியில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடங்கள் குலுங்கின, இரவு நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பலர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவிக்கப்டுகிறது. தற்போது வரை குறைந்தது 2,012 பேர் இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 2,059 பேர் காயமடைந்துள்ளனர், இதில் 1,404 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர், மேலும் மீட்பு பணிகள் நடந்து வருவதாக என்று அந்நாட்டு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.
மொரோக்கோ நாட்டில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மிகவும் அரிதானவை. சுமை 120 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பால் இன்னமும் மக்கள் குடியிருப்புகளுக்கு செல்லாமல் சாலையில் இரண்டாவது இரவி களித்தனர். மேலும் அந்நாட்டில் மூன்று நாட்கள் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.