fbpx

நடிகையுடன் லிவிங் டு கெதர்..!! கர்ப்பிணி மனைவியை எட்டி உதைத்து சித்ரவதை செய்த பிக்பாஸ் அர்னவ்..!! யார் இவர்..?

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6ஆம் தேதியான நேற்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தயாரிப்பாளரும் மகாலட்சுமியின் கணவருமான ரவீந்திரன் சந்திரசேகர், சாச்சனா, நடிகை தர்ஷா குப்தா, சத்யா குமார், தீபக், ஆர்ஜே ஆனந்தி, குக் வித் கோமாளி புகழ் சுனிதா, நடிகர் ரஞ்சித், சௌந்தர்யா, ஜெஃப்ரி, தர்ஷிகா, பவித்ரா ஜனனி, விஜே விஷால், அருண் பிரசாத், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகிய 18 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பலதரப்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், பிக்பாஸில் அர்னவ் என்பவர் போட்டியாளராக வந்துள்ளார். இவர் ஒரு சீரியல் நடிகர். மகராசி, கேளடி கண்மணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்த கன்னட நடிகை திவ்யா ஸ்ரீதருடன் அர்னவ் நடித்திருந்தார். அப்போது இருவரும் காதலித்து 5 ஆண்டுகளாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வசித்து வந்தனர். இதையடுத்து, அர்னவை திருமணம் செய்து கொண்டதாக ஸ்ரீதிவ்யா சமூகவலைதளத்தில் அறிவித்திருந்தார்.

அர்னவ், செல்லம்மா சீரியலில் வாய்ப்பு கிடைத்தது முதல் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட தொடங்கியது. தன்னை திருமணம் செய்து கொண்டு மற்றொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக திவ்யா குற்றம்சாட்டினார். அதேபோல், தன்னை அர்னவ் கட்டாயப்படுத்தி இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி திருமணம் செய்து கொண்டார் என திவ்யா கூறியிருந்தார். மேலும், அவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்த போது தன்னை எட்டி உதைத்து, அடித்து சித்ரவதை செய்ததால் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அர்னவ் திடீரென தலைமறைவாக இருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, கர்ப்பமாக இருந்த திவ்யாவுக்கு சீரியலில் நடித்த கலைஞர்களே 5-வது மாதம் பூமுடித்து வைத்தனர். பிறகு 9ஆவது மாதம் சீமந்தமும் நடந்தது. இதையடுத்து, திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தையை கூட பார்ப்பதற்கு அர்னவ் வரவில்லை. இதுவரை அர்னவ், திவ்யாவுடன் சேரவில்லை. இந்நிலையில்தான் அர்னவ் பிக்பாஸுக்குள் போட்டியாளராக சென்றுள்ளார். அங்கு என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read More : ’ஆண்களின் விந்தணுவுக்கு ஆபத்து’..!! ’உட்காரும் போது இனி இந்த தவறை செய்யாதீங்க’..!!

English Summary

When she was 3 months pregnant, she was kicked, beaten and tortured and reported to the police station.

Chella

Next Post

மீளா துயரம்!. இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு!. ஆயிரக்கணக்கானோர் பலியான சோகம்!.

Mon Oct 7 , 2024
Sadness again! Today marks one year since the start of the Israel-Hamas war! The tragedy of thousands of victims!

You May Like