fbpx

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் எல்.கே.அத்வானி..!! என்னதான் ஆச்சு..?

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (ஜூலை 4) வீடு திரும்பினார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எல்.கே.அத்வானி (96), கடந்த ஜூன் 27ஆம் தேதி வீடு திரும்பியிருந்தார். இந்நிலையில், புதன்கிழமை இரவு 9 மணியளவில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் அப்போலோ தனியாா் மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அத்வானியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மூத்த நரம்பியல் மருத்துவா் வினித் சூரியின் மருத்துவக் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

உரிய சிகிச்சைகள் அத்வானிக்கு அளிக்கப்பட்ட பின்னர், அவரது உடல்நிலை சீரான நிலைக்கு சென்றது. இந்நிலையில், இன்று (ஜூலை 4) மாலை 5 மணிக்கு அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே.அத்வானி வீடு திரும்பினார்.

ஒரே வாரத்தில் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவரது உடல்நலம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. முன்னதாக, கடந்த வாரம், டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) அவர் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகவியல் பிரிவில் அத்வானி சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Read More : மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

English Summary

Senior BJP leader and former Deputy Prime Minister L.K. Advani was admitted to Apollo Hospital and returned home today (July 4).

Chella

Next Post

PF பயனர்களுக்கு அதிர்ச்சி நியூஸ்..!! இனி முன்பணம் கிடையாது..!! இதற்கு மட்டும் அனுமதி..!! வெளியான அறிவிப்பு..!!

Fri Jul 5 , 2024
EPFO has issued a shock notification that PF advances will no longer be disbursed.

You May Like