ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல்கள் தொடர்பான பூர்வாங்க பணிகள் நாடாளுமன்ற தேர்தலுக்கான நன்னடத்தை விதிகள் முடிந்த பிறகு துவங்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உட்பட 25 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 488 பேரூராட்சிகள் உள்ளது., 12,618 ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 32 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.
இந்த நிலையில் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 5.1.2025 அன்று நிறைவு பெறுகிறது. இந்த மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல்கள் தொடர்பான பூர்வாங்க பணிகள் நாடாளுமன்ற தேர்தலுக்கான நன்னடத்தை விதிகள் முடிந்த பிறகு துவங்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்தல் முடிவடைந்து, வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடக்கும். அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களில் இருந்து ஒருவரையே பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர், மாநகராட்சி மேயர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடுபவர்களைத் தேர்வு செய்ய அந்த மறைமுகத் தேர்தலில் வாக்களிப்பார்கள்.