fbpx

டிசம்பர் 20ஆம் தேதி காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு டிசம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் டிசம்பர் 20ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சனிப்பெயர்ச்சி விழா ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் எப்போதுமே வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையிலேயே விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, டிசம்பர் 20ஆம் தேதி சனிப் பெயர்ச்சிவிழா நடைபெற உள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 20ஆம் தேதி காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

இனி இந்த சான்றிதழ்களை ரொம்ப ஈசியா வாங்கலாம்..!! அதுவும் வீட்டிலிருந்தே..!! வெளியான அறிவிப்பு..!!

Sat Dec 16 , 2023
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பொதுமக்களே இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. மழை, வெள்ள பாதிப்பினால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றை மீண்டும் பெறும் வகையில் அதற்கென சிறப்பு […]

You May Like