கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 23 ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
உலக புகழ்பெற்ற தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மிக சுற்றுலா தலமாகவும் விளங்குவது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில். அனைத்து மாதங்களும் திருவிழா நடந்தாலும் மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா மிகவும் பிரபலம். இந்த வருடம் மதுரை சித்திரை திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் ஏப்ரல் 21ம் தேதியும், சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் 23-ந்தேதி சித்திரா பௌர்ணமி அன்று நடைபெற இருக்கிறது. சித்திரை திருவிழா நடைபெறும் இரண்டு வாரங்களும் மதுரை நகரம் மட்டுமின்றி சுற்றி உள்ள அனைத்து கிராமங்களும் விழாக்கோலம் பூண்டிருக்கும். சித்திரை திருவிழா நடைபெறும் 12 நாட்களும் காலை மற்றும் மாலையில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் ஆகியோர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் வலம் வருவார்கள்.
இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவர். நடப்பாண்டில் சித்திரை திருவிழாவின் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் 23-ந்தேதி நடைபெறவுள்ளது, இதனை முன்னிட்டு 23ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.