வரும் 10ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் 126-வது மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அன்றைய தினம் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆண்டுக்கான கோடை சீசனை முன்னிட்டு உதகை தாவரவியல் பூங்காவில் வரும் 10ஆம் தேதி அன்று மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இது 10 நாட்கள் என மே 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலைத்துறையின் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
அதோடு ரோஜா கண்காட்சியும் நடைபெறவுள்ளது. இதனால், வரும் 10ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டத்திற்கு விடுமுறை விடப்படுகிறது. இதனை ஈடுசெய்ய வரும் 18ஆம் தேதி வேலை நாளாக ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
Read More : அடேங்கப்பா..!! சென்னை ரயில் நிலையங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது தெரியுமா..?