தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள், திருவிழாக்கள் போன்றவற்றின்போது மக்களின் பாதுகாப்பு கருதி அந்தந்த பகுதிகளில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், வரும் நவம்பர் 18ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்கார விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த நேரங்களில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் வரும் 18ஆம் தேதி செயல்படாது எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், விழாவில் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதால், அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.