fbpx

உங்கள் பணம் பறிபோகாமல் இருக்க ஆதாரை உடனே லாக் பண்ணுங்க..!! ரொம்ப ஈசிதான்..!! நீங்களே பண்ணலாம்..!!

ஆதார் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் இருக்கக்கூடிய சில ஓட்டைகளைப் பயன்படுத்தி ஏராளமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. இந்த மோசடி மூலமாக உங்களது அக்கவுண்ட் பேலன்ஸ் முழுவதுமாக காலியாகும் நிலை ஏற்படலாம். வங்கியில் பணம் எடுக்கப்பட்டதற்கான மெசேஜ் கூட இந்த வகையான மோசடியில் வருவது கிடையாது. இந்த மோசடியை செய்யக்கூடிய நபர்கள் ஆதார் கார்டு யூசர்களின் கைரேகை விவரங்களை பயன்படுத்தி பணத்தை திருடுகின்றனர்.

அதாவது ஜெராக்ஸ் கடைகள், இன்டர்நெட் சென்டர்கள் விவரங்களையும் பயோமெட்ரிக் மற்றும் கைரேகை போன்ற விவரங்களை சார் பதிவாளர் அலுவலகங்கள் அல்லது பிற இடங்களில் இருந்து மோசடி நபர்கள் திருடுகின்றனர். அதனைப் பயன்படுத்தி வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை திருடுகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆதார் விவரங்களை லாக் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்வது எப்படி..?

* mAadhaar ஆப்பை திறந்து அதில் உங்களது யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி லாகின் செய்ய வேண்டும்.

* உங்களது அப்ளிகேஷனில் காணப்படும் உங்களது ப்ரொஃபைலை கிளிக் செய்ய வேண்டும்.

* அப்ளிகேஷனின் மேல் வலது மூலையில் இருக்கக்கூடிய மெனு ஆப்ஷனை தட்டவும்.

* அதில் ‘பயோமெட்ரிக் செட்டிங்ஸ்’ என்பதை கிளிக் செய்து, ‘எனேபிள் பயோமெட்ரிக் லாக்’ ஆப்ஷன் என்பதை டிக் செய்ய வேண்டும்.

* ‘ஓகே’ என்பதை டேப் செய்தவுடன் உங்களது ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.

* OTP-ஐ என்டர் செய்ததும் பயோமெட்ரிக் விவரங்கள் உடனடியாக லாக் செய்யப்படும்.

இவ்வாறு செய்வதன் மூலமாக ஆதார் பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகளில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

Read More : Viral Video | “இந்த வாட்டி மிஸ்ஸே ஆகாது”..!! முன்கூட்டியே பாலத்தில் பார்க்கிங்கை போட்ட சென்னை வாசிகள்..!!

English Summary

A large number of scams are taking advantage of some of the loopholes in online transactions conducted through Aadhaar.

Chella

Next Post

Womens T20 Worldcup!.வெளியேறியது இந்திய அணி!. PAK.ஐ வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது நியூசி!.

Tue Oct 15 , 2024
Womens T20 Worldcup!. The Indian team is out!. Newsy entered the semi-finals after defeating PAK.

You May Like