மீண்டும் கொரோனா கிடுகிடுவென பரவி வருவதால் சீனாவில் புலம் பெயர் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் தப்பித்து செல்கின்றனர்.
சீனாவில் திடீரென கிடுகிடுவென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 2019ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நாடுகளுக்குள் பரவியது. உலகத்தின் முக்கால்வாசி நாடுகள் லாக்டவுன் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதையடுத்து படிப்படியாக தளர்த்தப்பட்டு தடுப்பூசி கொண்டு வரப்பட்டது. பல்வேறு சவால்களை எதிர்கொண்டு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது. ஏற்கனவே குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சீனா லாக்டவுன் அறிவித்தது.
தற்போது பல்வேறு நகரங்களிலும் பரவி வருகின்றது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்தந்த மாவட்ட, நகர நிர்வாகங்கள் தீவிர கொரோன தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு விடும் என்ற பயத்தில் சீனாவில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை ஒன்றில் வேலிகளை தாண்டி குதித்து தங்கள் சொந்த ஊருக்கு தப்பிச் செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இத்தொழிற்சாலையில் 3 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இத்தொழிற்சாலையில்தான் ஐபோன்கள் தயாரிக்கப்படுகின்றது. இரவு பகல் பாராமல் 100 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தங்களின் ஊருக்கு நடந்தே செல்ல முடிவெடுத்து தப்பித்து செல்கின்றனர்.
இந்தியாவில் 2020-ல் திடீரென லாக்டவுன் அறிவித்தபோது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால் நடந்தே சென்றனர். உணவு இல்லாமல் தண்ணீர் இல்லாமல் தொழிலாளர்கள் அவதிக்குள்ளானார்கள்.