fbpx

தமிழகத்தில் இத்தனை லாக்கப் மரணங்களா!.. மத்திய அரசின் பட்டியல் வெளியீடு!…

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்தான் அதிகபட்சமாக கடந்த 5 ஆண்டுகளில் 80 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் நடந்த லாக்கப் மரணங்கள் குறித்த புள்ளி விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 2017 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2022 மார்ச் 31ம் தேதி வரை 5 ஆண்டுகளில் நாட்டிலேயே அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 80 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், மஹாராஷ்டிராவில் 76, உத்தரப்பிரதேசத்தில் 41, தமிழ்நாட்டில் 40, பீஹாரில் 38 லாக்கப் மரணங்களும் நடந்துள்ளன.

2017-18 ஆண்டில் 146, 2018-19 ஆண்டில் 136, 2019-20 காலகட்டத்தில் 112 லாக்கப் மரணங்களும், 2020-21 காலகட்டத்தில் 100 லாக்கப் மரணங்களும், 2021-22 காலகட்டத்தில் 175 லாக்கப் மரணங்களும் நடந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2021-22 காலகட்டத்தில் மட்டும் குஜராத்தில் 24 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறியுள்ள மத்திய அரசு,
இவற்றில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் 201 வழக்குகளில் ரூ.5.80 கோடி நிவாரணம் கொடுக்க உத்தரவிட்டுள்ளது. சிக்கிம் மற்றும் கோவாவில் 2017-20 வரை ஒரு லாக்கப் மரணம் கூட பதிவாகவில்லை .ஆனால், 2021-22 காலகட்டத்தில் இரண்டிலும் ஒரு லாக்கப் மரணம் மட்டுமே பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

முக்கிய அறிவிப்பு...! வரும் மார்ச் 10-ம் தேதி வரை கால அவகாசம்...! இஸ்லாமியர்கள் ஆன்லைன் மூலம் உடனே விண்ணப்பிக்கவும்...!

Tue Feb 14 , 2023
ஹஜ்‌ பயணம்‌ மேற்கொள்ள விரும்பும்‌ தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்கலாமா என அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஹஜ்‌-2023-ல்‌ ஹஜ்‌ பயணம்‌ மேற்கொள்ள விரும்பும்‌ தமிழ்‌ நாட்டைச்‌ சேர்ந்த முஸ்லிம்‌ பெருமக்களிடமிருந்து, மும்பையிலுள்ள இந்திய ஹஜ்‌ குழு சார்பாக தமிழ்‌ நாடு மாநில ஹஜ்‌ குழு, ஹஜ்‌ விண்ணப்பங்களை வரவேற்கிறது. மத்திய ஹஜ்‌ குழு மூலம்‌ ஹஜ்‌ 2023-ற்காக விண்ணப்பிக்கும்‌ முறை 10.02.2023 […]

You May Like