போக்குவரத்து சேவை தொடர்பான பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு, தொழில்துறை சங்கங்களும், வர்த்தக கூட்டமைப்பு நிர்வாகிகள் இனியும் கடிதம் எழுதிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. தொழில் ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச வர்த்தகத் துறையின் போக்குவரத்துப் பிரிவு, பயனாளர்-கலந்துரையாடலுக்கான தகவல் பலகையை உருவாக்கி, புதிய டிஜிட்டல் முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது. பயனாளர் சங்கங்கள் இனி இந்த தகவல் பலகையில் லாகின்செய்து, தங்களது பிரச்சினைகள் அல்லது ஆலோசனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்று, பிரச்சினைக்கு வெளிப்படையான முறையில் தீர்வுகாணலாம்.
இது, தொழில் துறையினருக்கான புதுமையான முன்முயற்சியாக கருதப்படுவதுடன், ஒரு அமைச்சகம், துறை சார்ந்த பிரச்சினைகள் மட்டுமின்றி, பல்வேறு அமைச்சகங்கள்,துறைகள் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்கவும், போக்குவரத்துப் பிரிவை அனுமதிக்கும். இந்த புதிய தகவல் பலகை, விரைவில், இத்துறை சார்ந்த அனைத்து அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.