கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா , அவருடைய மகன் , எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் சந்திரகாந்த் ராமலிங்கம் உள்ளிட்டோர் மீது லோக் ஆயுக்தா வக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு வளர்ச்சி ஆணையம் குடியிருப்புகள் கட்டும் திட்டத்திற்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா அனுமதி வழங்கினார். இதற்காக எடியூரப்பா மற்றும் அவரது மகன் விஜயேந்திரா ஆகியோர் ரூ.12 கோடி லஞ்சம் வாங்கியுள்ளனர். இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஆபிரகாம் என்பவர் புகார் கூறியிருந்தார். இது தொடர்பான ஆடியோவும் வெளியானது.
இந்த ஆடியோ வெளியானதைஅடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக லோக் ஆயுக்தா வழக்கு பதிவு செய்துள்ளது. மக்கள் பிரதிநிதிகளை விசாரிக்கும் நீதிமன்றம் இதற்கு அனுமதி வழங்கவில்லை. இந்த வழக்கில் எடியூரப்பா , அவரது மகன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் லோக் ஆயுக்தாவுக்கு ஆணை பிறப்பித்தது.
இதையடுத்து எடியூரப்பா, விஜயேந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சந்திரகாந்த் ராமலிங்கம் என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் முக்கிய ஒப்பந்ததாரரான இவர் தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்மந்தி ஆவார். இவர் மீது தமிழகத்திலும் ஊழல் வழக்கு உள்ளது. 8 வழிச்சாலை திட்டத்தில் சேகர் ரெட்டி கைதானபோது இவர் பெயரும் இந்த விவாகரத்தில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சந்திரகாந்த் ராமலிங்கம் பணம் மதிப்பிழப்பின்போது ரூ.2000 நோட்டுக்கள் மாற்ற முற்பட்டபோது பிடிபட்டு தற்போது சிறையில் இருக்கின்றார் என கூறப்படுகின்றது.