நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதற்கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவ படையினர் நாளை தமிழ்நாடு வரவுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதல்கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவ படையினர் நாளை தமிழ்நாடு வர உள்ளனர். மேலும், 10 கம்பெனி துணை ராணுவ படையினர் மார்ச் 7ஆம் தேதி வர உள்ளனர். ஒரு கம்பெனிக்கு 90 துணை ராணுவ படையினர் இடம் பெற்றிருப்பார்கள்.
இந்த 25 கம்பெனி துணை ராணுவ படையினர் எந்த பகுதியில் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்துவது என்பது தொடர்பாக காவல்துறையினருடன் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. தேர்தல் தேதி மற்றும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் அது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, யார் எந்த பகுதியில் பணியில் ஈடுபடுவார்கள் என்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார். மேலும், 200 கம்பெனிகள் கேட்டிருந்த நிலையில், 25 கம்பெனி துணை ராணுவப்படையினரை முதற்கட்டமாக அனுப்பி வைத்துள்ளனர் என தெரிவித்தார்.
English Summary : 15 Company paramilitary force will arrive in Tamil Nadu tomorrow