fbpx

Lok Sabha | அதிமுக – தேமுதிக கூட்டணி..!! பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான தகவல்கள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலானவை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக – தேமுதிக கூட்டணி குறித்த செய்திகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவற்றை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. திமுக கூட்டணி உறுதியான நிலையில், அதிமுகவை பொறுத்தவரை தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி இன்று உறுதி செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் வரும் செய்திகள் யூகங்களின் அடிப்படையில் வெளிவருகிறது. தலைமை கழகம் அறிவிக்கும் அறிவிப்பே இறுதியானது என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : Lok Sabha | தபால் வாக்கு..!! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி..!!

Chella

Next Post

Election 2024 | தேர்தல் நடத்தை விதி என்றால் என்ன? அரசியல் கட்சிகளுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள்.!

Sat Mar 16 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நாடு முழுவதிலும் மாதிரி நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட உள்ளது. மக்களவைத் தேர்தல்கள் மட்டும் இன்றி அருணாச்சலப் பிரதேசம் ஓடிசா ஆந்திர பிரதேசம் சிக்கிம் போன்ற மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும் நடைபெற இருக்கிறது. இவற்றிற்கான தேர்தல் தேதிகளையும் மத்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட உள்ளது. மாதிரி நடத்தை விதி: நாட்டில் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் […]

You May Like