இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேநேரம், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவுடன், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் காரணமாக கட்சி மற்றும் சின்னம் ஆகியவை எடப்பாடி தரப்புக்கு சென்றது.
இப்படியான சூழலில், நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை நேற்று அவர் தாக்கல் செய்தார். மேலும், இந்த தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலை அல்லது தனி சின்னத்தில் போட்டியிட விரும்புகிறார். இதனால், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார். இதனை அடுத்து, இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அவரது ஆதரவாளரான புகழேந்தி தாக்கல் செய்துள்ள மனுவில், இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை. அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி, திமுகவுக்கு உதயசூரியன், அதிமுகவுக்கு இரட்டை இலை, தேமுதிகவுக்கு முரசு சின்னம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கதிர் அரிவாள் சின்னம் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகள் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிட வேண்டும்.
Read More : Annamalai | மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர் அண்ணாமலை..!! அதிமுக பரபரப்பு புகார்..!!