fbpx

மக்களவைத் தேர்தல் 3PM நிலவரம்: தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு ..! தருமபுரி டாப்..!

தமிழகத்தில் மூன்று மணி நிலவரப்படி 51.41% வாக்குப்பதிவு.

18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, இன்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. வாக்காளர் எண்ணிக்கை 6.23 கோடி. அதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடி. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடி. மற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 8,467. மேலும் முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலுக்கு 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில் காலை 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 51.41 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 57.86 சதவீதம் வாக்குப் பதிவு.

  1. தர்மபுரி – 57.86
  2. நாமக்கல் – 57.67
  3. கள்ளக்குறிச்சி – 57.34
  4. ஆரணி – 56.73
  5. கரூர் – 56.65
  6. பெரம்பலூர் – 56.34
  7. சேலம் – 55.53
  8. சிதம்பரம் – 55.23
  9. விழுப்புரம் – 54.43
  10. ஈரோடு – 54.13
  11. அரக்கோணம் – 53.83
  12. திருவண்ணாமலை – 53.72
  13. விருதுநகர் – 53.45
  14. திண்டுக்கல் – 53.43
  15. கிருஷ்ணகிரி – 53.37
  16. வேலூர் – 53.17
  17. பொள்ளாச்சி – 53.14
  18. நாகப்பட்டினம் – 52.72
  19. தேனி – 52.52
  20. நீலகிரி – 52.49
  21. கடலூர் – 52.13
  22. தஞ்சாவூர் – 52.02
  23. மயிலாடுதுறை – 52.00
  24. சிவகங்கா – 51.79
  25. தென்காசி – 51.45
  26. ராமநாதபுரம் – 51.16
  27. கன்னியாகுமரி – 51.12
  28. திருப்பூர் – 51.07
  29. திருச்சிராப்பள்ளி – 50.71
  30. தூத்துக்குடி – 50.41
  31. கோயம்புத்தூர் – 50.33
  32. காஞ்சிபுரம் – 49.94
  33. திருவள்ளூர் – 49.82
  34. திருநெல்வேலி – 48.58
  35. மதுரை – 47.38
  36. ஸ்ரீபெரும்புதூர் – 45.96
  37. வடசென்னை – 44.84
  38. தென் சென்னை – 42.10
  39. மத்திய சென்னை – 41.47

Kathir

Next Post

விஜய் பாணியில் சைக்கிளில் வந்து வாக்கு செலுத்திய நடிகர் விஷால்..!!

Fri Apr 19 , 2024
சென்னை அண்ணாநகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார் நடிகர் விஷால். மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஷால் சென்னை அண்ணா நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார். […]

You May Like