fbpx

Lok Sabha Election: இன்றும், நாளையும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியாது!

பொது விடுமுறை என்பதால் இரு நாட்களுக்கு தேர்தல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இயலாது என திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இதனிடையே வேட்பு மனுத்தாக்கல் கடந்த 20 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று(23.3.2024) மற்றும் நாளை (24.4.2024) பொது விடுமுறை என்பதால் இரு நாட்களுக்கு தேர்தல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இயலாது என திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

பொது விடுமுறை நாள்களில் வேட்பு மனுக்கள் பெற இயலாது என்ற விதியுள்ளது. அந்த வகையில் இன்று மாதத்தின் 2 ஆவது சனிக்கிழமை விடுமுறை நாளாகும். அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை நாளாகும். இந்த நாள்களில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைப் பெற முடியாது. அதன் பின்னர் 25 ஆம் தேதியிலிருந்து 27 ஆம் தேதி வரையில் மனுத்தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை!…

Kokila

Next Post

Shoking: மதுபான வியாபாரிகளிடம் இருந்து ரூ.100 கோடி...! டெல்லி முதல்வருக்கு 28-ம் தேதி வரை சிறை...!

Sat Mar 23 , 2024
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரணை நடத்தப்பட உள்ளது. மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை வியாழக்கிழமை கைது செய்தது. விசாரணைக்கு ஆஜராகுமாறு கேஜ்ரிவாலுக்கு பலமுறை வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் விசாரணைக்கு வரத் தயாராக இல்லை. கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேஜ்ரிவால் தரப்பில் நீதிமன்றத்தில் கோரப்பட்டது. இப்போதைய நிலையில் […]

You May Like