fbpx

Lok Sabha Election | அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா..?

மக்களவை தேர்தலில் பாஜகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்து வருகிறது. ஆளும் திமுக கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதே கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. திமுகவில் புதிய வரவாக மக்கள் நீதி மய்யம் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் அதிமுக, பாஜக கூட்டணியில் எந்ததெந்த கட்சிகள் இணையும் என்பது இதுவரை உறுதியாகவில்லை. குறிப்பாக பாமக, தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட போகிறார்கள் என்பது தெரியாமல் இருந்து வருகிறது. பாமக பொறுத்தவரையில் அதிக தொகுதிகள் தரக் கூடிய கட்சியுடன் கூட்டணி என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர். மற்றொரு கட்சியான தேமுதிக பாஜக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்க அதிமுக தயாராகிவிட்டதாகவும், பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் பிரேமலதா அவரது இல்லத்தில் சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. ஆனால், இதனை அதிமுக தரப்பில் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தேமுகவுடன் அப்படி எதுவும் பேச்சார்வார்த்தை நடத்தவில்லை என தெரிவித்துள்ளனர். தேமுதிக தொகுதி எண்ணிக்கை மற்றும் பேரத்தை உயர்த்தவே இதுபோன்ற செய்தியை தேமுதிக தரப்பினரே வெளியிடுவதாக கூறப்படுகிறது.

Read More : ரூ.451 கோடி மதிப்புள்ள நெக்லஸ்..!! மருமகளுக்கு Ambani குடும்பம் வழங்கிய பரிசு என்ன தெரியுமா..?

Chella

Next Post

Kuvathur | மேலும் சில நடிகைகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தேனா..? யூடியூப் சேனல்கள் மீது நடிகர் கருணாஸ் புகார்..!!

Sat Feb 24 , 2024
கூவத்தூர் விவகாரம் தொடர்பாக தன் மீது அவதூறு பரப்புவர்கள் மீதும், யூடியூப் சேனல்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் கருணாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூர் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போது அங்கு நடந்த சம்பவங்கள் குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜூ அளித்திருந்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. […]

You May Like