fbpx

Lok Sabha Election | கருத்துக் கணிப்பு முடிவுகள்..!! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!

ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்துடன் சேர்ந்து ஆந்திரா, அருணாச்சல், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தலும், 12 மாநிலங்களில் 25 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கும் நாள் முதல் கடைசி கட்டத் தேர்தல் முடிவடையும் ஜூன் 1ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தபிறகு எந்த கருத்துக்கணிப்பு முடிவுகளையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடைபெறும்போது கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டால், அது மற்ற இடங்களில் தேர்தலில் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், எப்போதும் இது போன்ற தடைகள் விதிக்கப்படுவது வழக்கம் தான்.

Read More : மக்களே உஷார்..!! இந்த நம்பரில் இருந்து ஃபோன் வந்தா எடுக்காதீங்க..!! மத்திய அரசு திடீர் எச்சரிக்கை..!!

Chella

Next Post

Daniel Balaji | மறைந்த பிறகும் பிறர் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய டேனியல் பாலாஜி..!!

Sat Mar 30 , 2024
வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, பொல்லாதவன், வடசென்னை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார். வீட்டில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் டேனியல் பாலாஜி உயிரிழந்தார். அவருக்கு வயது 48. அவரது மறைவு செய்தி தமிழ் திரையுலகிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும், அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மறைந்த டேனியல் பாலாஜியின் கண்கள் இன்று தானமாக பெறப்படுகிறது. தானத்தின் […]

You May Like