fbpx

Lok Sabha Elections 2024: பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்..! முழு விவரம்…!

2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்திருக்கிறது. முன்னதாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 102 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கேரளா மற்றும் கர்நாடகா உட்பட 88 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜூன் 1ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை, பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் என நன்கு கட்சிகளிடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதை இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இருந்தாலும் பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை தனித்தனியாகி போட்டியிடுகின்றனர். குறிப்பாக பஞ்சாபில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்திற்கான 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி தற்போது அறிவித்துள்ளது.

அதன்படி, லூதியானாவில் அம்ரீந்தர் சிங் பிரார் ராஜா வார்ரிங் போட்டியிடுகிறார். குர்தாஸ்பூரில் இருந்து சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, கதூர் சாஹிப்பில் இருந்து குல்பீர் சிங் ஜிரா மற்றும் ஆனந்த்பூர் சாஹிப்பில் இருந்து விஜய் இந்தர் சிங்லா ஆகியோருக்கும் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.

பஞ்சாபில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்:
குர்தாஸ்பூர்
அமிர்தசரஸ்
கதூர் சாஹிப்
ஜலந்தர்
ஹோஷியார்பூர்
ஆனந்த்பூர் சாஹிப்
லூதியானா
ஃபதேகர் சாஹிப்
ஃபரித்கோட்
ஃபிரோஸ்பூர்
பதிண்டா
சங்ரூர்
பாட்டியாலா

Kathir

Next Post

14 வருடங்களுக்கு பிறகு வெளியான ரகசியம்! கார்த்தி - தமன்னா காதலை உடைத்த இயக்குநர்!

Mon Apr 29 , 2024
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக  நடிகை தமன்னா வலம் வருகிறார். பையா, சுறா, தில்லாலங்கடி, பாகுபலி, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் கவாலாயா பாடலில் நடனம் ஆடியதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் தமன்னா. நடிகர் சிவக்குமாருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், நடிகர் சூர்யா – ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து […]

You May Like