fbpx

Lok Sabha | தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல்..? தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தகவல்..!!

லோக்சபா தேர்தலின் போது தமிழ்நாட்டில் பணப்பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் கமிஷனர் அருண் கோயல் மற்றும் துணை தேர்தல் கமிஷனர்கள் அடங்கிய குழுவினர் சென்னை வந்தனர். நேற்று இவர்கள், அங்கீகரிக்கப்பட்ட தமிழக கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தனர். இரண்டாவது நாளாக மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், ”தேர்தல் திருவிழாவை, அனைத்து வாக்காளர்களும் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில், ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தேர்தலின் போது மது விநியோகத்தை கட்டுப்படுத்தவும், பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவும், பதற்றமான வாக்குச்சாவடிகளை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். ஜனநாயக முறைப்படி வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் 68,144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் 18 முதல் 19 வயதுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 5.26 லட்சம் ஆகும். தேர்தல் முறைகேடுகள், பணப்பட்டுவாடா குறித்து ‘சிவிஜில்’ (cVIGIL) செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும். அப்படி புகார் அளிக்கும் போது, 100 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க முடியும்.

கடந்த சட்டசபை தேர்தலின் போது ‘ சிவிஜில்’ ஆப் மூலம் 5,800 புகார்கள் பெறப்பட்டன. வாக்காளர்களுக்கு மதுபானம் விநியோகம் செய்யப்படுகிறதா? என்பது கண்காணிக்கப்படும். பணப்பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பு தீவிரமாக இருக்கும். ஜிபே, பேடிஎம் உள்ளிட்டவை மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறதா? என்பதும் கண்காணிக்கப்படும். தேர்தலுக்கு 5 நாட்கள் முன்னதாக பூத் சிலிப்கள் விநியோகம் செய்து முடிக்கப்படும். ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டு முடிவு எடுக்கப்படும். வாக்காளர்களுக்கு ஆன்லைன் மூலம் பணப்பட்டுவாடாவை தடுக்க தொழில்நுட்ப வசதி உள்ளது. விவிபேட் ஒப்புகை சீட்டுகளை முழுவதுமாக எண்ணுவது தற்போதைய தேர்தல் நடைமுறைக்கு ஒத்துவராது” என்று தெரிவித்துள்ளார்.

English Summary : Lok Sabha elections in Tamil Nadu in one phase

Read More : பாஜகவில் இணைந்த விஜயதரணியின் MLA பதவி பறிப்பு..!! கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை..!!

Chella

Next Post

சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் மறந்தும் கூட இந்த 5 உணவுகளை சாப்பிடக்கூடாது.? ஏன் தெரியுமா.!?

Sat Feb 24 , 2024
உணவே மருந்து என்ற பழமொழியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆரோக்கியமான நோய் நொடி இல்லாத வாழ்க்கைக்கு ஊட்டச்சத்தான உணவை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஊட்டச்சத்தான உணவுகள் சாப்பிடும் போது உடலில் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழலாம். இதையேதான் உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் பழமொழியாக கூறியுள்ளனர். ஆனால் சிறுநீரகத்தில் பாதிப்பு இருப்பவர்கள் ஒரு சில உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். தற்போதுள்ள உணவு […]

You May Like