fbpx

Lok Sabha | இரவோடு இரவாக அதிமுக கூட்டணிக்கு ஆதரவு..!! இன்று முக்கிய கட்சி இணையும் என எதிர்பார்ப்பு..!!

மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்யவும் தொகுதிகளை பகிர்ந்து கொண்டு வேட்பாளர்களை அறிவிக்கவும் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் திமுக 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

அதே நேரத்தில் பல சுற்று பேச்சுவார்த்தைக்கு பின்னரும் இதுவரை கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் அதிமுக தவித்து வந்தது. அதிமுக கூட்டணி பா.ம.க மற்றும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், நேற்றைய தினம் பாமக, பாஜக கூட்டணியில் இணைந்தது. இதற்கிடையே, தேமுதிக, அதிமுகவில் இணைவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மூவேந்தர் புலிப்படை அமைப்பு, மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் நேற்றிரவு அறிவித்துள்ளன. எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து இரு அமைப்பின் தலைவர்களும் ஆதரவு கடிதத்தை வழங்கினர். தற்போது அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்.டி.பி.ஐ., அகில இந்திய ஃபார்வாட் பிளாக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேமுதிகவும் இக்கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : Job | மாதம் ரூ.60,000 வரை சம்பளம்..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! தமிழக அரசில் சூப்பர் வேலை..!!

Chella

Next Post

Election: தமிழகத்தில் உள்ள 39 தொகுதி தேர்தலை நடத்த ரூ.750 கேட்கும் மாநில தேர்தல் ஆணையம்...!

Tue Mar 19 , 2024
தேர்தல் தொடர்பான செலவினங்களுக்கு தற்போது வரை ரூ.750 கோடி கேட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டத்தில் தமிழகத்தில் உள்ள 39 மற்றும் புதுச்சேரி என 40 மக்களவை தொகுதிகள், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரேநாளில் ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை மார்ச் 20-ம்தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுத்தாக்கலின் கடைசி நாள் மார்ச் […]

You May Like