இந்திய மக்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாராளுமன்றத் தேர்தலில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மேலும் பொது தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது.
மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி முடிவடைகிறது. வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்குரிய கடைசி நாள் மார்ச் 30ஆம் தேதி என தேர்தல ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான்று பொது விடுமுறை அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.