fbpx

Lok Sabha Election 2024| தேர்தல் தேதி, அட்டவணை மார்ச் 13 வெளியீடு.! தேர்தல் ஆணையம் அறிக்கை.!

Lok Sabha Election 2024: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் சில கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டது. இந்நிலையில் 2024 ஆம் வருட பொதுத்தேர்தல் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 13ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற 17 வது பாராளுமன்ற பொது தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 303 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த அரசிற்கான பதவிக்காலம் இந்த வருட மே மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் பதினெட்டாவது பொதுத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல கட்டங்களாக நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

தேர்தல் நடைபெறும் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தற்போது பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி வருகின்ற மார்ச் 13ஆம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பதினெட்டாவது பாராளுமன்ற தேர்தலுக்கான அட்டவணை வருகின்ற மார்ச் 13 ஆம் தேதிக்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகபிரபல பத்திரிக்கை தெரிவித்துள்ளது . இந்தப் பத்திரிக்கை தேர்தல் ஆணையத்தின் கருத்தை மேற்கோள் காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

மத்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களிலும் தேர்தல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொது தேர்தல் நடத்துவதற்கான களப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவதற்கான தயார் நிலையை ஆய்வு செய்து மார்ச் 13ஆம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள தேர்தல் ஆணையர்களுடன் ஆலோசனை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் வாக்குப்பதிவின்போது பிரச்சனைக்குரிய இடங்கள் பற்றியும் கண்டறிந்து வருகின்றனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் இயக்கம் தேர்தலுக்கு பாதுகாப்பு வீரர்களின் தேவை மற்றும் மாநில எல்லைகளின் கண்காணிப்பு ஆகியவற்றையும் ஆராய்ந்து வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் அடங்கிய குழு மேற்கு வங்காளம் உத்திர பிரதேசம் பீகார் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலும் வர இருக்கின்ற நாட்களில் ஆய்வு நடத்தும் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தின் ஆய்வு மார்ச் 13ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் 97 கோடி இந்தியர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2019 ஆம் வருட தேர்தலை விட வாக்காளர்களின் எண்ணிக்கை ஆறு சதவீதம் அதிகரித்து இருக்கிறது. பல மாதங்கள் நீடித்த வாக்காளர்களின் திருத்தப்பட்டியல் பணிகள் முடிவடைந்து கடந்த பிப்ரவரி மாதம் இறுதி கட்ட வாக்காளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

English Summary: Lok Sabha Election 2024: As per election commission reports, 2024 parliament election dates will announce in March. 13.

Next Post

இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து.!?

Fri Feb 23 , 2024
பொதுவாக நாம் வீட்டில் சமைக்கும் உணவுகளாக இருந்தாலும், ஹோட்டலில் வாங்கி உண்ணும் உணவுகளாக இருந்தாலும் ஒரு சில உணவுகளை நீண்ட நேரம் வைத்திருந்து சூடு பண்ணி சாப்பிடுவது பல வீடுகளில் வழக்கமாக இருந்து வருகிறது. உணவுகளை தேவைக்கேற்ப சமைத்து சூடாக சாப்பிட்டால் தான் அந்த உணவில் உள்ள ஊட்டச்சத்து நம் உடலுக்கு முழுமையாக கிடைக்கும். ஆனால் முந்தைய நாள் சமைத்த உணவுகளை அடுத்த நாள் சூடு பண்ணி சாப்பிடுவது உடலுக்கு […]

You May Like