இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் இருந்து நயன்தாரா நீக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ’லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அடுத்ததாக, ரஜினிகாந்தின் 171-வது படத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ். இயக்கம் மட்டுமல்லாது, தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வரக்கூடிய அவர், ரத்னகுமார் இயக்கும் படத்தைத் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் முதல் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலில் இந்த படம் த்ரில்லர் ஜானரில் படமாக எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த கதையில்தான் ராகவா லாரன்ஸ், நயன்தாரா நடிக்க இருந்தனர். ஆனால், தற்போது இந்த படத்தின் கதை மாற்றப்பட்டுள்ளதாகவும், எனவே ராகவா லாரன்ஸ் ஜோடியாக வேறு நடிகையை நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.