தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. அதேபோல கேரளாவில் 3.50-க்கு லியோ படத்தின் முதல் காட்சி பெருமளவில் திரையிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் LCU இல் இணைந்துள்ளது.
‘லியோ’ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜுன், சாண்டி, மிஸ்கின், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பல வலிமையான நடிகர்கள் நடித்துள்ளனர். தமிழ்நாட்டில் காலை 9 மணிக்குத்தான் லியோ படம் ரிலீஸ் ஆகிறது. ஆனால், காலையில் இருந்தே தியேட்டர்களில் ரசிகர்கள் கச்சேரியை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், லியோ படத்தின் முதலாம் பாதி ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே சூப்பராக இருந்ததாக தெரிவிக்கும் ரசிகர்கள் இரண்டாம் பாதியை லோகேஷ் கனகராஜ் சொதப்பி விட்டார் என ஒரு சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.