டீ, காஃபி குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்தியாவில் காலை, மாலையில் டீ, காபி இடம் பெறாத வீடுகளை பார்ப்பது மிகவும் அரிதுதான். கணினியில் வேலை பார்ப்பவர்கள் முதல் தீவிர உடல் உழைப்பில் ஈடுபடுவர்கள் வரை வேலைக்கு இடையே கண்டிப்பாக டீ அருந்துவதை பார்க்க முடியும். பலருக்கு டீ அல்லது காஃபியை குடிக்காவிட்டால் அன்றைய தினமே எதையோ மிஸ் செய்வது போல உணர்வார்கள்.
குளிர்காலமோ, வெயில் காலமோ டீக்கடையில் மட்டும் எப்போதும் கூட்டம் நிறைந்து இருக்கும். மதிய நேரத்தில் கூட பலரும் டீ அருந்தும் பழக்கம் வைத்திருப்பார்கள். இளைஞர்கள் பலரும் தங்களுக்கு காலை உணவே இந்த டீ தான் என்று சொல்லும் அளவுக்கு பட்டினி கிடந்தால் கூட மறக்காமல் டீ குடிப்பதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில் தான், காஃபி குடிக்காமல் 6 மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்து வேலை பார்த்தால், உயிர் இழப்பதற்கான வாய்ப்புகள் 60% வரை உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. காஃபி குடிப்பவர்கள் உடலில் வளர்சிதை பாதிப்புகள் குறைவாக காணப்படுவதாக பயோமெட் சென்ட்ரல் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இது அபத்தமாக தெரிந்தாலும், இது உண்மை என கூறுகிறார்கள்.