fbpx

’இபிஎஸ் வாழ்க’..!! முழக்கமிட்ட முன்னாள் அமைச்சர் விரட்டி அடிப்பு..!! பசும்பொன்னில் பரபரப்பு..!!

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின், இபிஎஸ் வாழ்க என கோஷமிட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 60ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சியில், 30-ஆம் தேதி அரசு விழாவாகவும் நடைபெறுகிறது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த வர உள்ளனர். இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு பசும்பொன் கிராமத்தில் ஆய்வு செய்தார். மேலும், கண்ட்ரோல் ரூம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் பார்வையிட்டார்.

’இபிஎஸ் வாழ்க’..!! முழக்கமிட்ட முன்னாள் அமைச்சர் விரட்டி அடிப்பு..!! பசும்பொன்னில் பரபரப்பு..!!

முன்னதாக ராமநாதபுரம் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவில் அ.தி.மு.க-வினர் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனை செய்யும் நோக்கோடு செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, முன்னதாக தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்க வங்கி பெட்டகத்திலிருந்து தன்னிடம் கொடுக்க வேண்டும் என இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் தரப்பினர் கடும் போட்டியிட்டனர். இதைத் தொடர்ந்து இ.பி.எஸ் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் கட்சியின் உள் கட்சி பூசலில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக் கூறி தங்க கவசத்தை ராமநாதபுரம் டி.ஆர்.ஓ காமாட்சி கணேசிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பசும்பொனில் உள்ள அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு மதுரையிலிருந்து கொண்டுவரப்பட்ட தங்க கவசத்தை அதிகாரிகள் முன்னிலையில் அணிவிக்கப்பட்டனர்.

’இபிஎஸ் வாழ்க’..!! முழக்கமிட்ட முன்னாள் அமைச்சர் விரட்டி அடிப்பு..!! பசும்பொன்னில் பரபரப்பு..!!

இந்தப்பிரச்சனைகளில் ஏற்பட்ட சலசலப்பு அடங்குவதற்குள் எடப்பாடி தரப்பினரால் மீண்டும் சலசலப்பு நடந்துள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று காலையில் தொடங்கிய போது, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க-வினர் வந்து தேவர் நினைவிடத்தில் மாலை அணிந்து மரியாதை செலுத்தினார். அப்போது ‘எடப்பாடி யார் வாழ்க வாழ்க’ என முழக்கமிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்.பி.உதயகுமார் வெளியேறச் சொல்லி கோஷமிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Chella

Next Post

’ஒரே நாடு, ஒரே போலீஸ் சீருடை’...!! பிரதமர் மோடியின் புதிய திட்டம்..!!

Fri Oct 28 , 2022
எல்லை இல்லா குற்றங்களை தடுக்க ‘ஒரே நாடு, ஒரே போலீஸ் சீருடை’ என்ற யோசனையை பிரதமர் மோடி முன்வைத்துள்ளார். ஹரியானா மாநிலம் சூரஜ்கண்டில் நடைபெற்ற மாநில உள்துறை அமைச்சர்கள் 2-வது நாள் மாநாடு நடைபெற்றது. இதில், காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு என கூறினார். இந்நிகழ்வில் அவர் பேசியதாவது, ”மாநிலங்களுக்கு இடையே சட்டம்-ஒழுங்கு தொடர்பான விவகாரங்களில் இணைந்து செயலாற்ற வேண்டும். உளவுத்துறையும், […]
நாளை முதல் 144 தடை உத்தரவு..!! கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறையா..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

You May Like