fbpx

“பார்த்துப் பேசு தம்பி”..!! “After all நீ ஒரு ஐபிஎஸ்”..!! “வா மோதிப் பார்ப்போம்”..!! வருண்குமார் எஸ்பி-ஐ தீண்டும் சீமான்..!!

விஜய் நல்லது செய்தால், பாராட்ட வேண்டியதுதானே? நீங்கள் 27ஆம் தேதி முடிந்த பிறந்த நாளை, நேற்று வரை கொண்டாடிக் கொண்டு இருக்கிறீர்கள். சரியென்றால் சரி, தவறென்றால் தவறு என்போம். எல்லாவற்றையும் குறை சொல்ல நாங்கள் என்ன மன நோயாளிகளா? என்று சீமான் தெரிவித்திருந்தார். திருச்சி எஸ்பி வருண்குமார், நாம் தமிழர் இயக்கத்தை பிரிவினை வாத இயக்கம் என்று விமர்சித்த நிலையில், அதுகுறித்து சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஆவேசமாக பதிலளித்த அவர், ”நாம் தமிழர் இயக்கத்தை திருச்சி எஸ்பி வருண் குமார் நீண்ட நாட்களாகவே கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார். புதிதாகக் கண்காணிக்கப் போகிறார்களா? 36 லட்சம் வாக்குகளை வாங்கி, மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறோம். தனித்து நின்றே போட்டியிடுகிறோம். நீங்கள் எங்களை பார்த்து பிரிவினை வாத இயக்கம் என்பதா? எதை வைத்துப் பிரிவினை என்கிறீர்கள்? இவரா (வருண் குமார்) நாட்டை ஆள்கிறார்?

தமிழன் நான், தமிழன் என்று சொன்னால் பேரினவாதமா? நீ உண்மையிலேயே தமிழ்த் தாய்க்கும் தமிழ்த் தகப்பனுக்கும் பிறந்தாயா? அப்படி இருந்தால் தமிழ் பேரினவாதம் என்று சொல்வாயா? உனக்கு மட்டும்தான் மனைவி, குழந்தைகள் இருக்கிறார்களா? எங்களுக்கெல்லாம் இல்லையா? என் குடும்பத்தினரை, தாய், தந்தையை, கட்சிக்காரர்களை நீ இழிவாகப் பேசவில்லையா?. எத்தனை ஆண்டுகள் காக்கிச் சட்டை போடுவாய்? இறங்கித்தானே ஆக வேண்டும். பார்த்துப் பேசு தம்பி. மோதுவது என்று ஆகிவிட்டது. வா மோதிப் பார்த்து விடுவோம். After all நீ ஒரு ஐபிஎஸ்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Read More : பெண்களே..!! உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் நகைகள்..!! இவ்வளவு நன்மைகளா..?

English Summary

“Look and talk, brother. It’s time to clash. Let’s clash and see. After all, you are an IPS officer,” he said harshly.

Chella

Next Post

கழிவுநீர் கலந்த குடிநீரை அமைச்சரும், திமுகவினரும் குடிப்பார்களா..? பாஜக தலைவர் அண்ணாமலை தாக்கு..!!

Thu Dec 5 , 2024
Annamalai has raised the question, "Will the minister and DMK members come forward to drink the drinking water provided in the area?"

You May Like