fbpx

மீன ராசியில் பயணிக்கும் சனி பகவான்..!! யோகத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்..!!

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர், செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை நமக்கு திருப்பித் தருவார். சனி பகவான் 2025ஆம் ஆண்டு குருபகவானின் சொந்த ராசியான மீன ராசியில் நுழைகிறார். 2027 ஜூன் மாதம் வரை இதே ராசியில் தான் பயணம் செய்யவிருக்கிறார். அந்த வகையில், சனி பகவானின் மீன ராசி பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் யோகத்தை பெறுகின்றனர்.

ரிஷபம்

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள். அனைத்து துறைகளிலும் வெற்றி நிச்சயம். கடின உழைப்பு நல்ல பலன்களை தரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
சிக்கி கிடந்த பணம் உங்களை தேடி வரும்.

மிதுனம்

வாழ்க்கை நன்றாக இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். தொழிலில் நன்மைகள் உண்டாகும். சனி பகவானின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.

கும்பம்

உடல் மற்றும் மனரீதியாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். பண சிக்கல்கள் நிவர்த்தி அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும்.
புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
இந்த காலகட்டத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

Read More : ’ஒரே நேரத்தில் பலருடன் உறவு’..!! ’காமத்தை அடக்க முடியாத மாணிக்கவாசகர்’..!! மகாவிஷ்ணுவின் மறுபக்கம்..!!

English Summary

3 particular Rasis get Yoga due to Pisces Transit of Lord Saturn.

Chella

Next Post

US Open 2024!. வரலாறு படைத்த ஜானிக் சின்னர்!. பட்டத்தை வென்ற முதல் இத்தாலியன் என்ற பெருமை!

Mon Sep 9 , 2024
US Open 2024: Jannik Sinner clinches singles title after hammering Taylor Fritz

You May Like