fbpx

டீசல் டேங்க் வெடித்து லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு… ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்….

விழுப்புரம் அருகே சாலை ஓரத்தில் லாரியை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுனர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

விக்கிரவாண்டி அருகே சுங்கச்சாவடி உள்ளது. திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து பூச்சி மருந்து ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. சுங்கச்சாவடி அருகே வந்தபோது திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் ஓட்டுனரும் , உதவியாளரும் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி பழுது பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது  திடீரென டீசல் டேங்க் வெடித்தது. மளமளவென கொளுந்துவிட்டெறிந்த தீ, அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிக்கும் பரவியது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த லாரியில் அதன் ஓட்டுனர் உறங்கிக் கொண்டிருந்தார் . தீப்பிடித்த லாரியின் ஓட்டுனர், கிளீனர் அவரை எழுப்பு அவசரமாக கீழே இறக்கி உள்ளனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அந்த ஓட்டுனர் உயிர் தப்பினார். மேலும் காப்பாற்றிய ஓட்டுனர் மற்றும் கிளீனருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு கரும்புகை சூழ்ந்தது.

சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Post

ரூ.5 கோடி மதிப்புள்ள பத்து கிலோ தங்கம் சிக்கியது... 55 பேரிடம் சுங்கத்துறை விசாரணை ....

Sat Sep 3 , 2022
திருச்சி விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக வான்நுண்ணறிவு பிரிவினருக்கு ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கக் கோரியிருந்தனர். சோதனையை தீவிரப்படுத்திய சுங்கத்துறை அதிகாரிகள் சிங்கப்பூர் , துபாயில் இருந்து வரும் பயணிகளிடம் தங்கம் வைத்திருந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் […]

You May Like