உடல் எடையைக் குறைத்து எலும்பை வலுப்படுத்தும் நரிப்பயறின் நன்மைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள். நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான பல சத்துக்கள் நரிப்பயறில் உள்ளன. அதனால் இதை கட்டாயம் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் அனைவரும் எப்போதாவது ஒரு முறை நரிப்பயிரை(மோத் தால்) ருசித்திருக்க கூடும். சில சமயம் முளை கட்டிய பயறுகளாகவும் சில சமயம் பருப்பு வகைகளாகவும் உட்கொள்ளப்படுகிறது. இந்த பருப்பு சுவையில் அற்புதமாக இருப்பது மட்டும் அல்லாமல், பல உடல்நல பிரச்னைகளில் இருந்து விடுபடவும் உதவுகிறது. எலும்பு தொடர்பான பிரச்னைகளில் இருந்து விடுபட வைப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது. நீங்கள் இதற்கு முன் கேள்விப்பட்டிராத இந்த நரிபயறின் சில ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி, புகழ்பெற்ற டாக்டர் அகன்க்ஷா அகர்வால் (BHMS), புது தில்லி அவர்களிடம் இருந்து கேட்டு அறிந்து கொள்வோம். இந்த பருப்பை உங்கள் வழக்கமான உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எலும்புகளை பலப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மன அழுத்த அளவை குறைக்கும். தசை பழுதுகளை சரி செய்யும். எடையை குறைக்கும். உடல் சக்தி அளவை அதிகரிக்கும். மலச்சிக்கலில் இருந்து விடுபட வைக்கும். எலும்புகளை பலப்படுத்தும். கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது வலுவான எலும்புகளை பராமரிக்கவும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களின் அபாயத்தைத் தடுக்க உதவுகிறது. பாஸ்பரஸ் சத்துக்களும் இதில் ஏராளமாக காணப்படுவதால், இது எலும்புகளை பலமாக்க உதவுகிறது. உங்களுக்கும் எலும்புகள் தொடர்பான ஏதேனும் பிரச்னை இருந்தால், கட்டாயமாக நரிப்பருப்பை ஏதாவது ஒரு வகையில் சமைத்து உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.