fbpx

உடல் எடையை குறைக்கனுமா? அப்போ இதை மட்டும் சாப்பிடுங்க!

உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும், ஆரோக்கியமாகவும் இருக்க சாப்பிட வேண்டிய, உணவுகள் குறித்து இங்கு காண்போம்…

அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. அவல் என்பது நெல்லை ஊறவைத்து பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுவது. அவல் உடல் எடையை குறைக்க உதவும் முக்கிய உணவு பொருளாகும். ஏனெனில் அவலில் கலோரிகள் குறைவாக உள்ளது, இதில் சிறந்த புரோபயாடிக் உள்ளதால் ஜீரணிக்க எளிதானது. இதனால் தேவையற்ற கொழுப்புகள் உடலில் சேருவதை தடுத்து உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அவல் உப்புமா, கஞ்சி, பாயாசம், புட்டு அல்லது வெறும் அவலை கூட தேங்காய் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சிவப்பு அவல் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது.

மூங் டால் என அழைக்கப்படும் பாசிப்பயற்றில் புரதச்சத்து நிறைந்துள்ளது. பசி ஹார்மோனை கட்டுப்படுத்தும் தன்மை பாசிப்பயறு கொண்டுள்ளது. இதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக பாசிப்பயற்றை சேர்க்க வேண்டும். முளைக்கட்டிய பாசிப்பயறு உடற்குறைப்பு சமச்சீர் உணவாக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம் மற்றும் இரும்புச் சத்து உள்ளிட்ட சத்துக்களும் உள்ளது. எனவே முளைகட்டிய பாசிப்பயறு, பாசிப்பயறு தால் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடலாம்.

காய்கறி டாலியா என்பது பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து தயார் செய்யப்படும் ஒரு உணவு வகையாகும். டாலியா நார்ச்சத்து நிறைந்த ஒரு இந்திய சூப்பர்ஃபுட். இந்த ரெசிபியை உங்கள் விருப்பப்படி இனிப்பு மற்றும் காரம் சேர்த்து சமைக்கலாம். ஆனால் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது உங்கள் உடலில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்க சிலருக்கு சாலட் பச்சையாக இருப்பதால் பிடிக்காது. ஆனால் சில காய்கறிகள் மற்றும் மிளகு தூள் போன்ற மசாலா சேர்த்து சாப்பிட்டால் அது மிகவும் சுவையாக இருக்கும். சாலட்டில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன.

எனவே முளைகட்டிய தானியங்கள் கொண்டு சாலட் தயார் செய்து தினமும் சாப்பிடலாம். முளைத்த பயறு அல்லது பருப்பு வகைகளில் உள்ள டானின்கள், லெக்டின்கள் மதுரம் பைபெட்டுகள் உடலில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பினை குறைக்கின்றன. இதனால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக சாப்பிடலாம். முட்டை ஆரோக்கியமான காலை உணவு வகைகளில் ஒன்றாகும். முட்டைகளில் புரதம், வைட்டமின்கள், செலினியம் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன, இது ஊட்டச்சத்துக்களின் சக்தியாக அமைகிறது. காலை உணவில் முட்டை சேர்த்து வந்தால் பசி உணர்வை கட்டுப்படுத்தி உணவு உட்கொள்ளலை குறைப்பதாகவும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. தினமும் ஒரு முட்டை, முறையான உடற்பயிற்சி என்று வாழ்ந்தால் மகிழ்ச்சியான வாழ்வை நிச்சயம் பெறலாம்.

வாழைப்பழத்தில் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது. காலையில் வாழைப்பழம் சாப்பிடுவது நாள் முழுவதும் உங்கள் பசியை பூர்த்தி செய்ய உதவும். ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் 100 கலோரிகள் மற்றும் 3 கிராம் ஃபைபர் உள்ளது, உங்கள் தினசரி ஃபைபர் தேவையில் 12 சதவீதம் வாழைப்பழத்தில் இருந்து பெற முடியும். ஃபைபர் உட்கொள்ளலால் காரணமாக நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்த முடியும். தனியாக வாழைப்பழங்களை சாப்பிடுவதை விட தயிர், பாலாடைக்கட்டி அல்லது ஓட்மீல் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Kokila

Next Post

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட குட்நியூஸ்..

Thu Apr 6 , 2023
“ தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று சென்னை ஐஐடி வளாகத்தில், “அனைவருக்கும் ITM” திட்டத்தில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறைப் பெட்டகங்களை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சரின் திறனறி தேர்வு, திட்டத்தை நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திறனறி தேர்வு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் 1000 மாணவர்களுக்கு, அவர்கள் 12ம் […]

You May Like