ஆதார் என்ற 12 இலக்க தனித்துவ அடையாள எண் என்பது இந்திய குடிமக்களுக்கும் வழங்கக்கூடிய ஒரு எண்ணாகும். இதனை பல்வேறு காரணங்களுக்காக நீங்கள் ஒரு டிஜிட்டல் ஐடி கார்டு போல பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளும்போது, ஆதார் எண்ணை தவறவிடுவது அல்லது மறப்பது ஒரு நபருக்கு அழுத்தத்தை கொடுக்கலாம். ஒருவேளை உங்களுடைய ஆதார் எண்ணை நீங்கள் தொலைத்திருந்தாலோ அல்லது மறந்துவிட்டாலோ அதனை அதிகாரப்பூர்வ UIDAI வெப்சைட்டில் இருந்து மீட்டெடுத்துக் கொள்ளலாம்.
அதற்கான படிப்படியான வழிகாட்டுதல்:
* https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும்.
* உங்களுடைய தேவையை தேர்வு செய்யுங்கள் – நீங்கள் மீட்டெடுக்க விரும்புவது ஆதார்/EID என்பதை தேர்வு செய்யவும்.
* ஆதாரில் உள்ளபடி உங்களுடைய முழு பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் அல்லது/இ-மெயில் மற்றும் கேப்சா போன்றவற்றை குறிப்பிட வேண்டும். OTP ஐ என்டர் செய்யுங்கள்.
* மொபைல் OTP- அடிப்படையிலான சரிபார்ப்பு நிறைவுற்றதும், இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு கோரிக்கையின் பெயரில் ஆதார் நம்பர்/EID அனுப்பப்பட்டிருக்கும்.
ஒருவேளை உங்களுடைய மொபைல் நம்பரை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் பின்வரும் படிகளை பின்பற்றுங்கள்:
ஆப்ஷன் 1:
* ஆதார் மையத்தில் “Print Aadhaar” என்ற சேவையின் மூலமாக உங்கள் ஆதாரை மீட்டெடுக்கலாம்.
* இதற்கு நீங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.
* பின்வரும் கட்டாய விவரங்களை வழங்கவும்: ஆதார் அட்டையில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள படி பெயர், மாவட்டம் அல்லது PIN கோடு.
* பல்வேறு ரெக்கார்டுகளின் காரணமாக இந்த தகவல்களைக் கொண்டு உங்களுடைய ஆதாரை மீட்டெடுக்க முடியாத பட்சத்தில் உங்களுடைய பிறந்த தேதி, C/O, மாநிலம் போன்ற விவரங்கள் தேவைப்படும்.
* கைவிரல் ரேகை அல்லது கருவிழி ரேகை போன்ற பயோமெட்ரிக் ஆதன்டிகேஷனை வழங்க வேண்டும்.
* நீங்கள் வழங்கிய விவரங்களுடன் ஒத்துப் போகக்கூடிய ஆதாரை ஆபரேட்டர் உங்களுக்கு ஒரு இ-ஆதார் கடிதமாக பிரிண்ட் அவுட் எடுத்து கொடுப்பார்.
ஆப்ஷன் 2:
* 1947 என்ற இலவச எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும். கோரிக்கையின் பெயரில் உங்களுடைய பெயர், முகவரி போன்ற விவரங்களை வழங்க வேண்டும்.
* இந்த பெயர் மற்றும் முகவரிக்கான சரியான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றவுடன் அதனை உங்களுக்கு சேவை மைய அதிகாரி வழங்குவார்.
* இந்த சேவையைப் பெற நீங்கள் எந்த ஒரு கட்டணத்தையும் செலுத்த தேவையில்லை.
Read More : இளைஞர்களே உஷார்..!! அச்சுறுத்தும் கொழுப்பு கல்லீரல்..!! ஆரம்பித்திலேயே சரிசெய்ய சூப்பர் வழிமுறைகள்..!!