fbpx

”பணத்தைவிட அன்பு விலைமதிப்பற்றது”..!! 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை உதறித் தள்ளிவிட்டு காதலனை கரம்பித்த இளம்பெண்..!!

மலேசிய தொழில் அதிபர் கூ கே பெங் (வயது 78). இவர், மலாயன் யுனைடெட் இண்டஸ்ட்ரீஸின் தலைவர். இந்நிறுவனம் சொகுசு பிராண்டுகள் மற்றும் ஓட்டல்களில் பெரும் பங்குகளைக் கொண்ட முதலீட்டு நிறுவனம். கடந்த 2015ஆம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகையில் மலேசியாவின் 50 பணக்காரர்களில் 44-வது இடத்தைப் பிடித்தவர் தான் இந்நிறுவனத்தின் தலைவர் கூ கே பெங் (Khoo Kay Peng).

இவரது சொத்தின் நிகர மதிப்பு 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இவருடைய மகள் ஏஞ்சலினா. இவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தபோது தன்னுடன் படித்த சக மாணவன் ஜெடிடியாவை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பெற்றோரிடம் கூறியபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. சொத்து, அந்தஸ்து போன்ற காரணங்களை கூறி ஏஞ்சலினாவின் காதலை அவரின் தந்தை கூ கே பெங் ஏற்கவில்லை. இதனால், பரம்பரை சொத்துகள் அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு தனது காதலரை திருமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்தார்.

அதன்படி, இருவரும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஏஞ்சலினா தனது பெற்றோரின் விவாகரத்தில் சாட்சிக்காக நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டார். தந்தை பணம் சம்பாதித்துக் கொண்டிருந்த போது தாய் தான் முழுவதுமாக குடும்பத்தை பார்த்துக் கொண்டதால் தனது ஆதரவாக ஏஞ்சலினா கருத்து தெரிவித்தார். மேலும், விரைவில் தாயும், தந்தையும் மீண்டும் ஒன்றாக சேர்வார்கள் எனக் கூறினார்.

ஏஞ்சலினாவின் கதையும் காதலைப் பற்றிய அவரது கருத்தும் பெரும் பேசுபொருளாகி வருகிறது. இது குறித்து ஏஞ்சலினா கூறுகையில், “நாம் விரும்பினால் எப்போதும் பணம் சம்பாதிக்கலாம். ஆனால், அன்பு விலைமதிப்பற்றது. பணம் பல எதிர்மறை குணங்களுடன் வருகிறது. பிரச்சனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும். அன்பு மட்டுமே மகிழ்ச்சியைத் தரும்” எனக் கூறியுள்ளார்.

Chella

Next Post

இந்திய ரயில் தொழில்நுட்ப நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு….! சம்பளம் எவ்வளவு தெரியுமா…..?

Sat Aug 12 , 2023
நம்முடைய செய்தி நிறுவனத்தில் நாள்தோறும், பல்வேறு துறைகளில் இருக்கக்கூடிய வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், இன்றும் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளோம். இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் நிறுவனம் junior assistant பணிகளுக்கான காலி பணியிடங்களை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான வலைதளத்தில், இது தொடர்பான முழுமையான விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு 16 காலி பணியிடங்கள் இருக்கின்றன. […]

You May Like