பெண்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் காதல் திருமணங்களை பதிவு செய்ய, குஜராத் திருமண பதிவுச் சட்டம், 2009-ஐ மாற்றி அமைக்க வேண்டும் என்று அம்மாநில எம்எல்ஏக்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையடுத்து அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்பிற்குள்” காதல் திருமணங்களில் பெற்றோரின் சம்மதத்தை கட்டாயமாக்குவதற்கான சாத்திய கூறுகளை தனது அரசாங்கம் பரிசீலித்து வருவதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.
மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள நுகர் கிராமத்தில் மாணவர்களை கௌரவிக்கும் சமூக நிகழ்வில் பேசிய முதலமைச்சர்; மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ரஷிகேஷ்பாய் படேல் தன்னிடம் சிறுமிகளை குற்ற வழக்குகளில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார். காதல் திருமணங்கள் பெற்றோரின் சம்மதம் இருப்பதை உறுதி செய்ய ஏதாவது செய்ய முடியும்” என்று முதல்வர் கூறினார்.