பிக்பாஸ் சீசன் 7இல் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள 18 பேரில் ஐஷூவும் ஒருவர். இவர் ஊட்டியை சேர்ந்தவராவார். இவரது பெற்றோர் ஊட்டியில் ஏடிஎஸ் என்கிற புகழ்பெற்ற டான்ஸ் ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நடத்தப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று அசத்தி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட அமீரும், ஐஷூவும் உறவினர்கள் தான். ஐஷூவின் பெற்றோர் தான் அமீரை தத்தெடுத்து வளர்த்து அவருக்கு இருக்கும் நடனத்திறமை வெளியுலகிற்கு காட்டி, இன்று அவர் நடன இயக்குனராக ஜொலிக்க உதவி இருக்கின்றனர். ஐஷூ 5-வது சீசனில் அமீர் போட்டியாளராக இருக்கும்போதே கெஸ்டாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்.
பின்னர் தற்போது 7-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கிய ஐஷூ, முதல் இரண்டு வாரம் சூப்பராக விளையாடி வந்தார். ஆனால் போகப்போக நிக்சன் வீசிய காதல் வலையில் விழுந்த ஐஷூ, தற்போது கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். முழு நேரமும் நிக்சன் உடனே இருப்பதும் அவருக்கும் உணவு ஊட்டி விடுவது என பிக்பாஸ் வீட்டில் லவ் பர்ட்ஸ் ஆகவே இருவரும் வலம் வருகின்றனர்.
சோசியல் மீடியாவிலேயே இவர்களது காதல் கடுப்பேற்றும் விதமாக உள்ளதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐஷூவின் வீட்டிலும் இதனை அவர்கள் பெற்றோர் எதிர்த்து வருவது தெரியவந்துள்ளது. ஐஷூ பிக்பாஸுக்கு நுழைந்தது முதல் தன் மகளுக்காக ஐஷூவின் அம்மா ஷைஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆதரவு திரட்டி வந்தார். ஆனால், கடந்த ஒரு வாரமாக ஐஷூ குறித்து எந்த ஒரு பதிவையும் போடாமல் இருக்கிறார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ஐஷூவின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் தான் அவர்கள் எந்தவித பதிவும் போடாமல் இருக்கிறார்களோ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.